யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! மோடியிடம் விசேட கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமருக்கும் 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கும் இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில் தான் இந்த இந்த வேண்டுகோளை விடுத்ததாக ஜெயசூரிய கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"இந்த சந்திப்பு உண்மையிலேயே மறக்கமுடியாத மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவம்.

மேலும் சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி.
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்குமாறு முன்மொழியப்பட்டமையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri