நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல்! மிரள வைக்கும் வல்லுநர்களின் கணிப்பு
மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் அரிய வகை தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நவீன மற்றும் பசுமை ஆற்றல்
கஜகஸ்தான் நாட்டில் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள், பாரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவை உலகின் புதையல் என்று கூறப்படுகிறது.
இந்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் தொன் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குய்ரெக்டிகோல் மட்டுமின்றி பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த தாதுக்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரிய உலோகங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன.
இதன் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிய உலோகங்கள்
தற்போது சீனா மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்கு போட்டியாக கஜகஸ்தானின் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேநேரம் கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லை எனவும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்கான உட்கட்டமைப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கஜகஸ்தான் அரசு வெளிநாட்டு முதலீட்டைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
