ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணில் : க.சுகாஷ் குற்றச்சாட்டு
இனப்படுகொலையாளிகளான ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணில் விக்ரமசிங்கவை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
"அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை. இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களால் தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் இத்தருணத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்தோ அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அரசைக் காப்பாற்றும் குழுக்களுக்குத் தலைமை தாங்கியோ அரசாங்கத்தோடு சங்கமிப்பதென்பது ஈழத் தமிழினத்தின் நீதிக்கான பயணத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதாகவே அமையும்.
இந்தத் துரோகங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் செய்யாதென்பதை இனவிடுதலைக்காக இறந்தவர்களின் ஆத்மாக்களை மனதிருத்தி பொறுப்போடு கூறுகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri