கூட்டணியின் தலைமை பதவி ரணிலுக்கு வழங்கப்பட வேண்டும்! திலும் அமுணுகம
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைவதாயின், அதன் தலைமைத்துவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சர்வசன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வினவியபோது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கூட்டணியின் தலைமைப் பதவி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்னொரு தலைமைத்துவத்தின் கீழ் அணிசேர்வது குறித்து ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesingh) ஒருபோதும் நினைத்துப் பார்க்க மாட்டார். அதன் காரணமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கும் என்று கூற முடியாது.
அதே நேரம் இரண்டு கட்சிகளும் இணைந்து உருவாக்கும் கூட்டணியின் தலைமைப் பதவி ரணிலைத் தவிர இன்னொருவருக்கு வழங்கப்படுவதில் அர்த்தமிருக்காது. முன்னா் ஒன்றாக இருந்தவர்களே மீண்டும் ஒன்றிணைவதற்கு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
அந்த வகையில் முன்னரைப் போல ரணிலுக்கே தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் கடந்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கு வரும் சம்பிரதாயத்தை மீறி, கடந்த தேர்தலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியிலேயே நிலைத்திருக்கின்றனர்.வேறு தரப்பு ஆளுங்கட்சியாக வந்துள்ளனர்.
இவற்றைப் பற்றி ஐக்கிய மக்கள் சக்தி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் எதிர்க்கட்சியிலேயே இருக்க நேரிடும் என்றும் திலும் அமுணுகம தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
