சீன கப்பல் வருகையில் மாற்றம் இல்லை: வெளியான புதிய தகவல்
சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான்வாங் 5, எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு திட்டமிட்டப்படி பயணிக்கும். பின்னர் 17ஆம் திகதியன்று அங்கிருந்து புறப்படும் என்று இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் நேற்று இரவு வரை எவ்வித மாற்றங்களும் இல்லை என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்திய ஊடகத்தின் தகவல்படி, அவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று வரை இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சீன அரசாங்க தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இலங்கைக்கு இந்தியா கடும் அழுத்தம் - சீன கப்பலுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய முடிவு |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
