முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பாணை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட கருத்து...
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நேற்றைய தினம் ரனில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களுடன் ஒர் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்புபட்டிருப்பது நேற்றைய ஊடக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த கடிதத்தை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.