வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesingh) சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
குறித்த நிகழ்வானது கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வாக்குச் சீட்டு
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சீட்டு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச இன்று வேட்பு மனுபத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சர்வமத தலைவர்களுடன் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விஜயதாச ராஜபக்ச” நாட்டில் இன்று சிலர் தங்களின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளின் இந்த செயற்பாட்டை மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.இந்த நாட்டை சுமார் 50 முதல் 60 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை முன்கொண்டு சென்று நாட்டை நிர்வகிக்க தம்மால் இயலும் என தெரிவிக்கின்றனர்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் நாட்டில் மீண்டும் ஆட்சியை கோருகின்றனர்.
இந்த ஊழல் அரசியலில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலின் ஊடாக நாட்டில் அரசியலில் திருப்புமுனை ஏற்படும்.
நாட்டின் இறைமையை பாதுகாக்கக்கூடிய தலைவர் ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டும்” இவ்வாறு விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
