பேரழிவுகளுக்கு திட்டமிட்ட ரணில்! பதவி விலகுமாறு தம்மிக்க பெரேரா அதிரடி கருத்து
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலீடு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் என சாடியுள்ள அவர், தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டம்
பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலரில் தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டிய தமிக்க பெரேரா நிதியமைச்சர் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சரிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. டொலர் சம்பாதித்தல், கடன் வாங்குதல், அவசரக் கடன்கள், கடன்களைப் பெறுதல் போன்ற அனைத்து விடயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
உடனடியாக பதவி விலக வேண்டும்
இதன் காரணமாக நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
நிதியமைச்சரின் ஆலோசகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.