இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்: ரணிலின் ஆட்சி கவிழுமா...!
இலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படும் சாத்தியங்கள் உண்டு என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வழமையாக அரசியலில் நிகழாத மாற்றமொன்றே இவ்வாறு நிகழக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வு இடம்பெற்றால் இன்னும் பல அரசியல் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலின் ஆட்சி கவிழுமா
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நகர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் இன்றைய தினம் சுமார் 40க்கும் மேற்பட்ட தரப்புக்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும்கட்சியிலிருந்து சுயாதீனமானவர்கள், போராட்டக்களத்தில் போராடி வருவோர், எதிர்க்கட்சித் தரப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சந்திப்பில் பங்குபற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் அரசியல் ரீதியில் அதிரடி மாற்றங்களுக்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.