உள்நாட்டில் தமிழர்களுக்கு தவறான சமிக்ஞை தரும் ரணில்: மனோ கணேசன் காட்டம்
உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லது என்ற போதும், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கேள்வியுடன் கோரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடந்த வாரம் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.
தற்போது ஜனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் பொலிஸ்காரர்களை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்கள படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துக்கிறீர்கள்?
குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழு, இழு என்று இழுத்துகொண்டே போகிறீர்கள்? மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதீட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம். இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும்.
காணி வழங்கும் பொறுப்பு
ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம். ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் கூற வேண்டும்.
அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும். இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
