ரணில் - சஜித் கூட்டணி குறித்து ஹரின் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும்.
அதற்குரிய இடைவெளியை வழங்கினால் எமது ஆதரவாளர்கள் மாற்று அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும்.
அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும்
எனவே, அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும் இணைய வேண்டும். அவ்வாறு இணைவார்கள் என நம்புகின்றோம்.

நுகேகொடைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தை நடத்துவதற்கு அந்தக் கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை இளவரசர் என விளித்தேன்.
இந்த விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இந்த நாட்டில் இனி இளவரசர்கள் தெரிவாகப்போவதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan