ரணில் - சஜித் கூட்டணி குறித்து பிரபு எம்பி வெளியிட்ட கருத்து
சேரமாட்டோம் என்ற ரணில் - சஜித் இன்று வங்குரோத்து அரசியலுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை அகல பாதாளத்திற்கு தள்ளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தேசிய மக்கள் சக்தி மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்க்களப்பில் அவரது காரியாலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "நாங்கள் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்பதை நீங்கள் அவதானிக்க முடியும். விசேடமாக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்படுவாரா என நாடாளுமன்றத்தில் கூட பேசப்பட்டது.
கடும் விமர்சனங்கள்
ஆனால் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்து வரக்கூடிய அரசாங்கமாக இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த நாட்டிலே பழம் பெரும் அரசியல் கட்சியான ஜக்கிய தேசிய கட்சி ஊடாக இந்த நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பல பிரச்சனைகள் பல ஊழல் மோசடிகள் மத்திய வங்கி கொள்ளையர்களுடன் ஒன்று சேரமாட்டோம் என சஜித் பிரேமதாச அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் ரணில் ராஜபக்ச என நாங்கள் குறிப்பிடும் போது ரணிலுடன் மகிந்தவுக்கு நேரடியாக உறவு இருந்ததன் காரணமாக பின் கதவால் இந்த நாட்டுக்குள்ளே உள்ள நாடாளுமன்றத்துக்கு வந்தவர்தான் இந்த ரணில் விக்ரமசிங்க.
இவர் ஜனாதிபதியாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு மகிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ஆகினார். இதற்கு சஜித் கட்சி அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
