ரணிலின் மோசடியான சொத்து விபரம்: அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்கால கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது சொத்துக்களையும் கடன்களையும் மோசடியான முறையில் அறிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதியாக பதவி ஏற்றதும், ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்து, அநுரகுமார திஸாநாயக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணிலினால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால ஜனாதிபதி
அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்துக்கள் மற்றும் கடன்களை விட ஜனாதிபதி ரணில் பிரகடனப்படுத்தியுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறைவாக உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்வியின் போதே இதனை கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி, ரணில் அறிவித்துள்ள சொத்துக்கள் மற்றும் கடன்கள் சரியானதா என்பது குறித்தும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்ட பணம் வேறு கணக்குகளில் உள்ளதா என்பது குறித்தும் அநுரகுமார விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
