ரணிலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் - திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதித் திட்டங்கள்
தென்னிலங்கை அரசியலில் மீண்டும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மரசிங்கவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என பலர் அரசியல்வாதிகள் குழப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் ரணில் தனக்கே உரிய தந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணிலின் அரசியல் பயணத்தை உத்தியோகபூர்வமாக காட்டும் வகையில், கடந்த ஜுன் 11ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுக் கூட்டம் கொழும்பு, மல் வீதியில் உள்ள ரணிலின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அடுத்ததாக ரணில் என்ன செய்யப்போகிறார்...!
அடுத்ததாக ரணில் என்ன செய்யப்போகிறார்...! என்பதே இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியில் அனைவரினதும் முக்கிய கேள்வியாக அமைந்திருந்தது.

பொதுவாக ரணில் சில காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் என்றால், அவர் எதிர்காலத்திற்கான பலமான திட்டத்தைத் தீட்டுகிறார் என்றே அர்த்தமாகும் என சிலர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் அதிகாரம் இல்லாத போது, அமைதியாக இருந்து அரசியல் சதுரங்கப் பலகையில் காய்களை நகர்த்துவதையே ரணில் விரும்புவார். அந்த வேலையில் அவர் மிகவும் திறமையானவராகும். அவர் அதை ஆரம்பித்தால், அரசியல் நடவடிக்கைகளில் குளறுபடிகள் ஏற்படுவதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரணிலின் அடுத்தக்கட்டத் திட்டம்
இந்த நிலையில் ரணிலின் அடுத்தக்கட்டத் திட்டம் என்ன, அவரது வலையில் அடுத்ததாக விழப்போவது யார் என்பது போன்ற தகவலை அறிந்துகொள்ளலாம் என கூட்டத்தில் பலர் காத்திருந்தனர்.

எனினும், ரணில் தனது திட்டங்களை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தாமல், பல தரப்பினர் ஊடாகப் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டத்தினால் இலக்கு வைக்கப்படுபவர்கள், சில காலம் செல்லும் போது பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சமூக வலைத்தளமான டிக்டொக்கில் ஒரு பாடலையோ அல்லது காணொளியையோ சிறிய துண்டுகளாக வெட்டி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பதிவிடுவது வழக்கம்.
ரணிலும் இம்முறை டிக்டொக் பாணியில் தனது அரசியல் எதிரிகளுக்கு படிப்படியாக அடியைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam