பொதுஜன பெரமுனவை உடைக்கும் ரணிலின் திரைமறைவு அரசியல்(Video)
ரணில் விக்ரமசிங்கவின் திரைமறைவு அரசியலில் பொதுஜன பெரமுனவை உடைக்கும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே ரணில் இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கான செயற்பாடுகளைதான் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ச தற்போது ஆரம்பித்துள்ளார் என அறியமுடிகிறது.
மேலும் மொட்டு கட்சியில் இருந்து விலகி, ரணிலுக்காக ஒரு புதிய அணியை உருவாக்கும் திட்டத்தை தற்போது அவர் மேற்கொண்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நகர்வுகளுக்காக கொழும்பில் புதிய பணியகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோட்டாபயவின் முன்னாள் செயலாளரான சுதீஸ்வர பண்டாரவையும் தம்முடன் இணைக்க நிமல் லான்ச திட்டமிட்டுள்ளமை ராஜபக்சக்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது....
இவை உள்ளிட்ட உலக மற்றும், இலங்கை அரசியலின் நகர்வுகளை ஆராய்ந்துவருகிறது இன்றைய செய்திவீச்சு...





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
