புதிய ஜனாதிபதி யார்! வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் நகர்வு
ஒரு பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று தனது கட்சி உறுப்பினர்களுக்கு மகிந்த(Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியில் தற்போது பாரிய மாற்றங்களை செய்ய எத்தணித்திருக்கும் சந்திரிக்காவும்(Chandrika Kumaratunga) சில வேளைகளில் ரணிலுக்கு ஆதரவினை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் புலனாய்வுத் துறையான ரோ என்ன செய்கிறது, அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பது தொடர்பான தகவல்கள் ரணிலை தானாக சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |