நாமலுக்கு ரணிலின் ரகசிய தகவலால் ஏற்பட்டுள்ள குழப்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற நாமல் ராஜபக்சவிடம் பிரித்தானிய பயணம் குறித்து கேள்வி எழுப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மக்கள் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த வாரம் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது.
இதன் போது இது தொடர்பில் ரணில் கேள்வி எழுப்பியதாக தெரியவந்துள்ளது.
நாமல் - ரணில் சந்திப்பு
நிகழ்வின் போது நாமல் ராஜபக்ஷ அமர்வதற்குத் தயாரான வேளையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரை நோக்கி, இங்கே அமருங்கள் எனக் கூறித் தனக்கு அருகிலிருந்த ஆசனத்தைக் காண்பித்தார்.

எனினும், அந்த ஆசனத்தில் ஏற்கனவே பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அமர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்சவின் அண்மைய ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பயணங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
நாமலும் தனது பயண அனுபவங்களை அவரிடம் விரிவாக விளக்கியுள்ளார். இதன்போது, ரணில் விக்ரமசிங்க நாமலின் காதுக்குள் இரகசியமாக ஏதோ ஒன்றைக் கூற, அதற்கு நாமல் புன்னகையுடன் பதிலளித்தார்.
இரகசிய பேச்சுவார்த்தை
இவர்களின் இந்த நெருக்கமான இரகசியப் பேச்சுவார்த்தை அங்கிருந்த ஏனைய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.

கருத்தரங்கு நிறைவடைந்ததும், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் நாமல் ராஜபக்சவைச் சூழ்ந்துகொண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உங்கள் காதுக்குள் இரகசியமாகக் கூறியது என்னவென்று வினவினர்.
அதற்கு புன்னகையுடன் பதிலளித்த நாமல், அது ஒரு இரகசியம் எனக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.