யுத்த குற்றச்சாட்டு விசாரணையில் சிக்குவாரா கோட்டாபய: ரணில் கூறிய பதில் என்ன...!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை செய்வீர்களா என சர்வதேச ஊடகமொன்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் கூறியுள்ளதாவது, எந்த குற்றச்சாட்டுகளையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
விசாரணைக்கு அழைக்கலாம்
ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கூட குற்றஞ்சாட்டி அவரை விசாரணைக்கு அழைக்கலாம்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூடிமறைக்கின்றது என எவரும் தெரிவிக்க முடியாது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் காணப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
