ரணிலின் அதிகாரத் தாக்குதல் வெட்கக்கேடானது! இலங்கை- அமெரிக்க அமைப்பு கண்டனம்
தென் கலிபோர்னியாவில் செயற்படும், இலங்கை-அமெரிக்க சம்மேளனம், இலங்கையின் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலான 'கோட்ட கோ கம'விற்கு வெளியில் உள்ள அமைதியான போராட்டத் தளங்கள் மீது ஜூலை 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.
குறித்த நாளில் அந்த இடத்தை விட்டுச் செல்ல எதிர்ப்பாளர்கள் அதிகாரிகளுக்கு உறுதியளித்த போதிலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வகையில், இலங்கையர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு இந்தநிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிரான தாக்குதல்களை இலங்கை-அமெரிக்க சம்மேளனம் கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு

அத்துடன் நம்பகமான ஆதாரங்களின்படி, மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய போராட்டத் தளங்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் வன்முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பிணை எடுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால அரசாங்கம், அதிகாரத்தை ஏற்ற சில மணி நேரங்களிலேயே இத்தகைய வன்முறை தந்திரங்களை உடனடியாக கையாண்டது என்பது வெட்கக்கேடானது என்று அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
| இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்று இந்தியாவுக்கு சிக்கல் இல்லை: இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam