இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்று இந்தியாவுக்கு சிக்கல் இல்லை: இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இந்தியாவிடம் போதிய அன்னியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், எனவே இலங்கை, பாகிஸ்தான் போன்ற பொருளாதாரச் சிக்கல்களை நாடு சந்திக்காது என்றும் இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்நியச் செலாவணி
''தங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது. கையிருப்பை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு உள்ள பிரச்சினைகள் போன்று எமக்கு பிரச்சினைகள் இல்லை. நமது வெளிநாட்டுக் கடன்களும் குறைவாகவே உள்ளன
நமது வெளிநாட்டுக் கடன்களும் குறைவாகவே உள்ளன உலகம் முழுவதும் தற்போது பணவீக்கம் காணப்படுவதால் இந்திய மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. எனவே இது பணவீக்கத்தை குறைக்க உதவும்.
பொருளாதார நெருக்கடி
பெரும்பாலான பணவீக்கம் உணவு மற்றும் எரிபொருளில் உள்ளது. இதேவேளை மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல மாதங்களாக பாரிய அமைதியின்மையைக் கண்ட இலங்கையின் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 54.6 சதவீதத்திலிருந்து ஜூலையில் 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால்
பாகிஸ்தானும் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.
பாக்கிஸ்தான், 250 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.