ஆட்சியை கைப்பற்ற ரணில் வகுக்கும் திட்டம்!
ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்களில் புதிய திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 75வது ஆண்டு விழா செப்டம்பர் 6ம் திகதி வருகின்றது.
இதன்போது தற்போது ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நாட்டில் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான திட்டத்தை முன்வைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை மாற்றும் திறன் எதிர்க்கட்சியில் உள்ள எந்த கட்சிக்கும் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
1956ம் ஆண்டு 8 இடங்களை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பதையும் அவர் இளைஞர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri