நாடாளுமன்றம் ஊடாக அடுத்த காய்நகர்தலை மேற்கொள்ளும் ரணில்
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது தொடர்பில் நாடாளுமன்றம் ஊடாக அதிகாரம் வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு முழு நிதி அதிகாரம் உள்ளதால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மூன்று பிரதிநிதிகளுக்கும் முழு அதிகாரங்களும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரமும் வழங்குவோம் என ரணில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கூடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை முக்கியமானது எனவும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடம் இருந்து கூடுதல் கடன்களை பெறுவதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை எடுத்துக் கொண்டு தேவையான முடிவுகளை எடுப்போம். அமைச்சரவையை நியமித்தால், நிதிக் குழுவின் அதிகாரங்களை அதிகரித்து நாடாளுமன்றத்திற்கு வந்து முடிவெடுப்பதற்கு உதவுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri