ரணிலின் நெருங்கிய விசுவாசிகளால் சிறையில் ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கமைய, சிரிலிய சவிய கணக்குத் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு ஆதரவாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு முன்னணி முறைப்பாடு
2015 ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பினாலேயே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன் தலைவராக உலப்பனே சுமங்கல தேரர் பதவி வகித்துள்ளார். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் ஆலோசகராகவும் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் செயற்பட்டார்.
அரசியல் பகையுணர்வு
ரணில் - மைத்திரிபால ஆட்சிக்காலத்தில் கடுமையான அரசியல் பகையுணர்வை இந்த பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த கோட்டபாய ஆட்சிக்காலத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, அவர் பதவியில் இருந்து மக்களால் நீக்கப்பட்டார்.
இதன்போது கோட்டபாயவின் எஞ்சிய காலப்பகுதியில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கும் இந்த குழுவே பின்னணியில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri