தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகால தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. கட்சியின் தலைமைத்துவத்தை இளம் தலைமைக்கு வழங்கும் நிலைப்பாட்டுக்கு ரணில் வந்துள்ளமை அரங்கில் பெரும் மாற்றமாக விவாதிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவுக்கு தனது தலைமை தடையாக மாறினால், எந் நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடப்பட்டது.

தலைமைப் பதவி
அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார். எனினும், அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என ரணில் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் எனவும் இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என ரணில், செயற்குழுவுக்கு அறிவித்துள்ளார். அடுத்தாண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இரு கட்சிகளின் இணைப்பு
இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்ட அவர்,தான் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு, செயற்குழு அதை அங்கீகரித்தால், அதற்கு தான் இணங்கி செயற்படுவேன்.

அதற்கு தலைமையையும் விட்டுக் கொடுக்க தாயார்.நான் நீண்ட காலமாக கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறேன். நாட்டின் மிக உயர்ந்த பதியையும் வகித்து விட்டேன்.
மேலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்க முற்பட்டேன். அதனால்,தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பது பெரிதல்ல.
ஆனால் இது விரைவில் முடிவுக்கு வரப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.