சர்வதேச ஊடக நேர்காணலின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ரணில்
சர்வதேச ஊடகம் ஒன்றின் நேர்காணல் குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேர்காணலில் பங்கேற்ற குழு உறுப்பினர்களின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நேர்காணல் வெளியான உடனேயே ஊடகங்களுக்கு செவ்வி அளித்த விக்ரமசிங்க, ஒளிபரப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததாகக் கூறினார்.
மனித உரிமைகள் சட்டத்தரணி இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சற்குணநாதன் நேர்காணலில் பங்கேற்பார் என தமக்குத் தெரிவிக்கப்பட்டது.
நேரகாணலின் ஒருபகுதி
சித்தாந்தங்கள் வேறுபட்டிருந்தாலும், தாம் அவரை அறிந்திருப்பதால், அவரின் பங்கேற்பு குறித்து மகிழ்ச்சியடைந்ததாக ரணில் குறிப்பிட்டார். இருப்பினும், சற்குணநாதனுக்குப் பதிலாக வேறு இரண்டு குழு உறுப்பினர்கள் இருப்பதை தாம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் இருவருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தொடர்புகள் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரணில் கூறினார். உள்ளூர் ஊடகங்களுடன் தாம் பங்கேற்கும் நேர்காணல்கள் வேறுபட்டவை.
இருப்பினும், குறித்த சர்வதேச ஊடகம், தம்மை இரண்டு மணி நேரம் நேர்காணல் செய்தது ஆனால் ஒரு மணி நேர நேர்காணலை மாத்திரமே வெளியிட்டுள்ளது. அதுவும் சிறந்த பகுதிகளை அதில் காணவில்லை," என்று விக்கிரமசிங்க கூறினார்.
"ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அப்போது நான் அதிகாரத்தில் இல்லை என்று சொன்னேன்.
மேலும், மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் இலங்கையில் முதன்மையான மதத் தலைவர் என்றும், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றொரு மதத் தலைவர் என்றும் நான் அவர்களிடம் சொன்னேன்," என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
