ராஜபக்சர்களை பாதுகாக்கும் தீவிர முயற்சியில் ரணில்! விமர்சிக்கும் எதிர்க்கட்சி
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போது ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களை பாதுகாத்தார், இன்று அரசாங்கத்திற்கு சென்றும் அவர் ராஜபக்சர்களை பாதுகாக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது பூச்சிய நிலைக்கு இறங்கியுள்ளனர். இந்த ஜனாதிபதியை தக்கவைத்துக்கொள்ள மொட்டுக் கட்சியின் ஆதரவு தேவைப்படும். நாட்டில் தேர்தல் ஒன்று நடத்தினால் மொட்டுக் கட்சி ஆதரவு ஜனாதிபதிக்கு தேவைப்படாது.
மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்
கடந்த காலங்களில் மொட்டு கட்சியினர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது. கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இன்று ரணில் விக்ரமசிங்க பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.
அன்று ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போது ராஜபக்சர்களை பாதுகாத்தார். இன்று அரசாங்கத்துக்கு சென்றும் அவர்களை பாதுகாக்கிறார். எனவே திருடர்களை வைத்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? விரும்பியவர்களை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 57 நிமிடங்கள் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
