பசிலின் கடும் அழுத்தம் : அமைச்சரவையை மாற்ற தயாராகும் ரணில்
அடுத்து வரும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளது.
அமைச்சு பதவி
அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பொதுஜன பெரமுன ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு நீண்டகாலமாக ஜனாதிபதி ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சரவை மாற்றம்
கடந்த ஆட்சியின் போது மோசடியாளர்கள் என மக்களால் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகளை வழங்குமாறு பசில் கோரியிருந்தார்.
எனினும் அதனை முற்றாக நிராகரித்து வந்த ஜனாதிபதி , தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
