ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் : பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்

Sri Lanka Police Mahinda Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe
By Vethu Oct 05, 2026 04:55 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையாலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமையாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பாரிய தலைமைத்துவ நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுதத்தில் ஆரம்பித்து மாதத்திற்கு ஒருமுறை நாடு முழுவதும் பரந்தளவில் மக்கள் கூட்டங்களைத் நடத்தத் திட்டமிட்டிருந்தது.

நெருக்கடி நிலை

எனினும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது அந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மேடையில் இருக்க வேண்டும் என்ற உடன்பாட்டின் அடிப்படையில், மகிந்த ராஜபக்சவை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்ய கட்சி நடவடிக்கை எடுத்தது.

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் : பரிதாப நிலையில் ராஜபக்சர்கள் | Ranil Plans To Capture The Power  

எனினும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மகிந்தவை வலுக்கட்டாயமாக மேடை ஏற்றுவது தொண்டர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமல் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையாலும், மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை காரணமாகவும், கட்சியின் அடுத்தக் கூட்டத்தை நடத்தும் இடம், அதன் தலைமை மற்றும் அழைக்கப்படும் கட்சிகள் தொடர்பாக இறுதி செய்யும் பல கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு தரப்பினர் மூலமாக பொதுஜன பெரமுன கட்சிக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கட்சியின் அமைப்புப் பணிகளை இளம் மற்றும் பிரபலமான பிரதித் தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்.

ரணிலின் சூழ்ச்சி

அதற்காக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு வருட காலத்தில், கஞ்சன விஜேசேகர காட்டிய செயல்திறனே இதற்குக் முக்கிய காரணமாகும்.

பல சந்தர்ப்பங்களில் அவரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டு அதன் தலைமைப் பதவியை வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அதற்கு நேரடியான பதிலை வழங்காத அவர், சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு தேவை என்று தெரிவித்தார்.

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் : பரிதாப நிலையில் ராஜபக்சர்கள் | Ranil Plans To Capture The Power  

அந்தகாலத்தில், ரணிலின் இந்த அரசியல் நகர்வு குறித்து அறிந்த உடனேயே  நாமல் மாத்தறைக்கு சென்று கஞ்சன விஜேசேகரவைச் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், தற்போது நாமலுக்கு பதிலாக கஞ்சன விஜேசேகரவை முன்னிறுத்த ரணில் விக்ரமசிங்க முயன்றதன் பின்னணியில் ஆழமான அரசியல் நோக்கம் மறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தனக்குச் சாதகமான ஒருவரை கட்சியின் உயர் நிலைக்குக் கொண்டு வந்து, அதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கூட்டணியை உருவாக்குவதே ரணிலின் பிரதான திட்டமாகும்.

அனுராதபுரப் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்காமைக்கும் இதுவே ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை ராஜபக்ச குடும்பம் சந்தித்து வரும் நிலையில், சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுதி, அடுத்த தலைவர் தான் என்பதைக் காட்ட ரணில் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாமலுடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

நாமலுடன் சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

நாமலின் இன்றைய பரிதாப நிலை நாளை யாருக்கு..! ஆளும் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

நாமலின் இன்றைய பரிதாப நிலை நாளை யாருக்கு..! ஆளும் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US