ரணில் சந்தர்ப்பவாதி- பெரும்பான்மையினரின் மேலாண்மைக்கு அடிபணியோம்: சுமந்திரன் சூளுரை
கோட்டாபாய ஆட்சிக்கு எதிரான குழப்ப சமயத்தில் அதை சுமுகமாகத் தீர்ப்பதற்கு எல்லாத் தரப்புகளுடனும் எட்டப்பட்ட இணக்க உடன்பாட்டுக்கு தானும் சம்மதித்து வந்துவிட்டு, பிரதமர் பதவி என்றதும் இணக்க நிலைப்பாட்டைக் கைவிட்டுச் சென்ற சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த வி்டயத்தை அவர் நேற்று (22.11.2023) நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசமைப்புச் சபை
''அதிக எண்ணிக்கையின் காரணமாக, நீங்கள் எங்கள் உரிமைகளை மிதித்துவிடலாம் என்று
நினைத்தால் அது சரிவராது. நாங்கள் தலை சாய்க்க மாட்டோம்.
பெரும்பான்மை ஆட்சியை ஏற்க மாட்டோம். இந்த நாட்டில் கடைசி நபர் வாழும் வரை நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இங்கு பரிசீலனையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று அரசமைப்புச் சபை. அது குறித்துவ முன்னும் பின்னுமாக இன்று பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், நான் இன்னும் அடிப்படையான பிரச்சினை ஒன்றை எழுப்ப விரும்புகின்றேன். அரசமைப்புச் சபையில் ஒரு வெற்றிடம் உள்ளது. பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை.இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது எங்களுக்கு மிகவும் தீவிரமான பிரச்சினை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
ஓர் உறுப்பினரை நியமிப்பதற்கான உரிமை எமக்கு இருந்ததாலும், அதற்கான ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாலும், சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசமைப்புச் சபைக்கு நான் பிரேரித்தும் இன்றுவரை அவர் அரசமைப்புச் சபைக்கு நியமிக்கப்படவில்லை.
இதை நாங்கள் பலமுறை எழுப்பியுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எழுப்பியுள்ளார்.
அது எங்களின் உரிமை என்று சபாநாயகர் தெளிவாக கூறியுள்ளார். உண்மையில் தமக்கு (அந்த இடத்துக்கு நியமிக்கும்) உரிமை இருப்பதாகக் கூறும் ஏனையவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்று எழுத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.அவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்காத பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாது.
எனவே, அந்த இடத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது. இந்த உறுப்பினரை அரசமைப்புச் சபைக்கு நியமிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. இது வெறும் தொழில்நுட்பச் சிக்கல் இல்லை.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியும், எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரிய கட்சியுமான நமக்கு அரசமைப்புப் பேரவையின் பங்கேற்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 35 நிமிடங்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
