நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் தொடர்பாக ரணிலின் கருத்து
நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும் போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டமைக்கு நாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஒக்டோபர் மாதம் முதல் சாதாரண கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக டிஜிட்டல் முறையிலான கடவுசீட்டுக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
குறைவான விலை
டிஜிட்டல் முறையிலான கடவுச்சீட்டுக்களை கொண்டுவருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் பொறுப்பெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கடவுசீட்டுக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருந்தாலும் டிஜிட்டல் முறையிலான கடவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதில் நாம் திட்டவட்டமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சீராக உள்ள போது நாட்டை விட்டு வெளியேற யாரும் அவசரப்பட வேண்டாம் என கூறிய ரணில், ஒக்டோபர் மாதத்தில் இருந்து வெளிநாடு செல்ல இருப்பவர்கள் டிஜிட்டல் முறையிலான கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் முறையிலான கடவுச்சீட்டை பழைய கடவுச்சீட்டை விட குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |