ரணில் விடுக்கவுள்ள அழைப்பு!
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை அழைப்பு விடுப்பார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றுக்காக நாடாளுமன்றின் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வழமையான தேர்தல்களையும் நடத்தியதன் பின்னரே தேசிய அரசாங்கம் பற்றி பேச முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுப்பதாகவும் வேறும் ஓர் அரசாங்கத்தை நியமிப்பதற்கு தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென மக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி இன்றைய தினம் ஆளும் கட்சியினருடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.