ரணிலுக்கு அதிகளவு வாக்குகளை பெற்று தருவதே இலக்கு : ஐ.தே.க
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe)அதிகளவு வாக்குகளைப் பெற்று தருவதே எனது இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சிவலிங்கம் சுதர்சனன் (Sivalingam Sudarsanan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் நேற்று (09.06.2024) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"டொலரை நாம் சேமிக்க வேண்டும் அதற்காக வேண்டி எமது பொருளாதாரத்தில் தங்கியுள்ள உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
நாட்டை ஆளும் வியூகங்கள்
அதனூடாகத்தான் நமக்கு வெளிநாடுகளிலிருற்து வருமானம் கிடைக்கும். அதற்காக நாட்டின் தலைமைத்துவத்தில் நிபுணத்துவமானவர் இருந்தால் தான் நாட்டை வழிநடாத்திச் செல்ல முடியும்.
மேலும், ஒருவர் போர் செய்தால் அவருக்கு போர் செய்த வீயூகங்கள் தான் தெரியும். நாட்டை ஆளும் வியூகங்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. உள்நாட்டிலே அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு உள்நாட்டு விடயங்களைக் கையாளேவே தெரிந்திருக்கும்.
அதேவேளை, உள்ளூரிலே ஓர் அமைப்புக்காக ஓர் தலைவரைத் தெரிவு செய்வதற்காக பலரோடு சேர்த்து நாட்டின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் வைத்து ஒப்பீடு செய்து பார்த்தால் அது கற்பனை செய்ய முடியாத அளவிற்குள்ளது.
இந்நிலையில், இந்திய நாட்டை ஸ்த்திரமானதாக வைத்திருக்கக் கூடிய தலைவரை அந்த நாட்டு மக்கள் மூன்றாவது தடவையாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அதேபோன்றதொரு, தெரிவை நாமும் மேற்கொள்ள வேண்டும். எமது இலக்கு என்னவெனில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலிலே வாக்குகளைப் பெற்றவர்கள் போல் அல்லாமல் அதனைவிட அதிகளவு வாக்குகளைப் பெற்று அவர் ஒரு தனித்திறனான ஜனாதிபதி என்பதை நிரூபிப்பது தான்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |