ஜனாதிபதியை சந்தித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம் இரவு பத்தரமுல்ல பகுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 31 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
பொதுஜன கட்சியின் நிறைவேற்றுக் குழு
மாவட்ட இணைப்புச் செயற்குழுக்களின் தலைவர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நிறைவேற்றுக் குழு இன்றைய தினம் காலை கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
