டயானா கமகே மீதான குற்றச்சாட்டு: குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து, உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
தொம்பே மாகம்பிட்டிய (தெற்கு) பகுதியைச் சேர்ந்த வை.ஏ. சமன் நிஷாந்த என்ற நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டினை நேற்று பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டின் பிரஜை அல்லாத டயானா கமகேவின் பெயரை இணைத்து கட்சியின் செயலாளர் தவறிழைத்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றில் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
