தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ரணில் இணக்கம்(Video)
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாகவும் அடுத்து ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக இவை தொடர்பில் பேசி இறுதி தீர்மானம் எடுப்போம் எனும் முடிவோடு ஜனாதிபதி இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,இன்று நாங்கள் மூன்று விடயங்கள் குறித்து பேசினோம். முதலாவதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசினோம்.
இது தொடர்பில் உடனடியாக உரியவர்களுடன் பேசி, ஜனவரி மாசத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்திருக்கின்றார் என கூறியுள்ளார்.
இன்றைய கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,