சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள்
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேற்குறித்த நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல் வரை அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |