யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்
யாழில் வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவதுடன் குறைந்தளவு வாக்காளர்களே வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. பி.ப 3.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி - கஜிந்தன்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தீபன்
தர்மலிங்கம் சித்தார்த்தன்
தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அவர் பதிவு செய்துள்ளார்.
செய்தி - கஜிந்தன்
வாக்களித்த சுமந்திரன்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் யாழ். மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கைச் செலுத்தியுள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அவர் தனது வாக்கினைச் செலுத்தினார்.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யாழ். துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
