நாடாளுமன்றத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்திய மைத்திரி மற்றும் எதிர்க்கட்சியினர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) ஆகியோர் இன்றையதினம்(17) நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சிலரும் அருகில் இருந்துள்ளனர்.
மௌனமாக சென்ற சஜித்
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதி தொடர்பில் சிலர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதியை வழங்குவதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அது அவர்களுக்கு உள்ள உரிமை. ஆனால். அதற்கு அனைத்து கட்சித் தலைவர்களுக்கு கதைத்து முடிவொன்றை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அருகில் இருந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் தொடர்பான கேள்வி வரும் போதும், அது தொடர்பில் அவரது நிலைப்பாட்டை வினவிய போது அவர் மௌனமாக அந்த இடத்தை விட்டு கடந்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் மௌனமாக கடந்து செல்வதே இந்த விடயத்தில் அவரது சம்மதத்தை தெரிவிக்கத்தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.