நாட்டில் சிறுவர்களுக்கு பரவும் நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு (Colombo) சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சிறுவர்களுக்கு இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே சிறுவர்கள் நோய்வாய்ப்பட காரணம் என தீபால் பெரேரா பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |