ரணில் - மகிந்தவின் அரசியல் குற்றங்கள்! பகிரங்கப்படுத்தும் ஆளும் தரப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), மகிந்த ராஜபக்ச( Mahinda Rajapaksa) மற்றும் பலர் வேண்டுமென்றே செய்த அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்கள்தான் இலங்கையை பாதிப்படைய செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(19.02.2025) கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பெரும் எழுச்சி
போராட்டத்தின் மூலம் பெரும் எழுச்சியை மக்கள் நடத்தினர். இதை பயன்படுத்தி முன்னாள் ஊழல் ஆட்சியாளர்களை வெளியேற்றி ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தார்.
தனக்கு பணமும் இல்லை, வாக்குகளும் இல்லை என்ற ரணில் விக்ரமசிங்கவின் கூற்றைக் கேட்டு சிரித்து, மக்களையும் நாடாளுமன்றத்தையும் துண்டு துண்டாகக் கூறுபோட்டவர்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இந்த நாடாளுமன்றத்தில் நாம் செய்த பழைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சு இயந்திர இயக்குநர் காகிதம் இல்லை என்று கூறினார். இதன் மூலம் பாரிய அரசியல் மோசடி செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
