ரணிலின் தொடர் வெளிநாட்டு பயணங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (26.09.2022) அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் பயணம்
அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.
இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்ததன் பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.
விஜயத்தில் பங்கேற்பவர்கள்
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஊடக பணிப்பாளர் ஷானுக்க கருணாரத்ன, நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான பணிப்பாளர் ரந்துல அபேவீர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
இதேவேளை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க இரண்டு நாள் விஜயமாக இன்று (25.09.2022) இரவு ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ப்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
விசேட பாதுகாப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 217 நாடுகளில் இருந்து சுமார் 700 அதிகாரிகள் குறித்த இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஜப்பான் டோக்கியோ தலைநகரத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடல்
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் தங்கியிருக்கும் நாட்களில் ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
