மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ச குடும்பத்தை ரணில் வாழ வைத்துள்ளார்: சஜித் தரப்பு சாடல்
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார சாடியுள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று (13.03.2024) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மரணிக்கும் நிலை
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.
நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள்.
மொட்டு சின்னமோ அல்லது ரணில்
இந்த நிலை மாற வேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர்.
அடுத்து அனுரகுமார திஸாநாயக்காவின் கட்சி இருந்த காலத்தில் இந்த நாட்டில் கொலை கொள்ளை நடந்தது. அவர்கள் ஆட்சியில் மக்களுக்கான ஆட்சி எதனையும் செய்யாவில்லை.’’ என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |