இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் ரணில்! நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை
நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே உள்ளது. அதனை கலைக்கவேண்டும்.
மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
Parliament has again shown that it is in the clutches of @PodujanaParty that had lost its mandate. I repeat that the P must be dissolved. @anuradisanayake made a good point: number of those that publicly endorsed @DullasOfficial is more than 113! What happened then???
— M A Sumanthiran (@MASumanthiran) July 20, 2022
நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.
டலஸிற்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113வை விட அதிகம். அவர்களிற்கு என்ன நடந்தது என ஜேவிபியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.