இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு (Live)

Sri Lanka Police Colombo Parliament of Sri Lanka President of Sri lanka
By Mayuri Jul 20, 2022 06:47 AM GMT
Report

ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை வாக்கெண்ணும் பணிகள் சற்று நேரத்தில் ஆரம்பமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களித்துள்ளனர். 

செல்லுபடியற்ற வாக்குகள் - 4

வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 2

ரணில் விக்ரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும், டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும், அநுரகுமார திஸாநாயக்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் இணைப்பு

இலங்கையின் ஜனாதிபதி இன்னும் சில மணிநேரங்களில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சேலைன் போத்தலோடு வைத்தியசாலையிலிருந்து நாடாளுமன்றம் வந்து வாக்களித்துள்ளார். 

சுகயீனம் காரணமாக அவர் முன்னுரிமை அடிப்படையில் தமது வாக்கினை பதிவு செய்திருந்ததுடன், வாக்களித்ததன் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். 

இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு  (Live) | Parliament Security

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவும் சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்களித்துள்ளார். 

இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு  (Live) | Parliament Security

மூன்றாம் இணைப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. 

முதலாவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்துள்ளதோடு, அடுத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வாக்கினை பதிவு செய்துள்ளார். 

தொடர்ந்து பேர் குறிப்பிட்டு அழைக்கப்படும் உறுப்பினர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமூகமளித்துள்ளார். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பிற்கு சமூகமளிக்கவில்லை. 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பினை புறக்கணித்துள்ளார்.


இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு  (Live) | Parliament Security

இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு  (Live) | Parliament Security

இரண்டாம் இணைப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்றைய தினம் நடத்தப்படவுள்ள நிலையில் சற்று முன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது. 

இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் இரகசிய வாக்கு சீட்டுக்களை பிரிதொரு நபருக்கு காண்பிக்கக் கூடாது என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரது பெயருக்கு அருகிலுள்ள கூட்டில் ''1'' என இலக்கத்தை குறிப்பிட வேண்டும், அவ்வாறில்லை எனில் அந்த வாக்கு செல்லுடியற்றதாக கருதப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். 


முதலாம் இணைப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தடை உத்தரவு

இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள இலங்கை ஜனாதிபதியின் பெயர்! 4 செல்லுபடியற்ற வாக்குகள் பதிவு  (Live) | Parliament Security

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் பதில் பிரதமர்

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ அல்லது பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும். மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும்.

தடுக்க முயற்சிக்க கூடாது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US