நல்ல நேரம் பார்த்து வைத்துள்ள ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதிவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்திருந்தது.
இந்நிலையில், நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க அண்மையில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் 23ம் திகதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதிவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க 22ம் திகதியே பதவியேற்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், வெற்றிக்கான நல்ல நேரம் 23ம் திகதியே இருப்பதாகவும், அன்றைய தினம் பதவியேற்பதற்கு ரணில் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri