மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே : ஹரின் புகழாரம்
இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் ரணிலுடன் இணைவதற்குத் தற்போது கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை சஜித் அணியினர் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளதோடு, நாட்டின் பொருளாதாரம் சீரான நிலைக்கு வரவேண்டுமெனில் ரணிலின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri