ரணிலின் தெரிவு மக்களின் எதிர்பார்ப்பு அல்ல:போராட்டம் தொடரும்:நடிகை தமிதா அபேரத்ன
ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வருவது நாட்டு மக்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல என நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை முற்றாக வீதியில் தள்ளியுள்ளனர்.
போராட்டம் நின்று விடாது
போராட்டம் இத்துடன் நின்று விடாது. நாட்டுக்காக உயிரிழக்கவும் தயார் எனவும் தமிதா அபேரத்ன கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையான தமிதா அபேரத்ன, காலிமுகத்திடல் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே பங்கேற்று வரும் போராட்டகாரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri
