ரணிலுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இருக்கின்றது என்பது மாயை:வீரவங்ச
ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இருக்கின்றது என்ற நிலைப்பாடு தற்போதை ஒரு மாயையாக மாறியுள்ளது எனவும் பிரச்சினைகளால் நிறைந்துள்ள நாட்டில் மேலும் பிரச்சினைகளை முன்வைக்கும் அவசியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு மூளையில் பதில் இல்லை
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருக்கு மூளையில் பதில் இல்லை என்பதை காணக் கூடியதாக உள்ளது எனவும் பிரச்சினைகள் நிறைந்துள்ள நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வே அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு உரத்தை வழங்க முடியாத கமத்தொழில் அமைச்சர் பதவி எதற்கு. அரசாங்கத்தின் பொறுப்பற்ற பயணம் குறித்து அதிருப்தி இருக்கின்றது.
எனினும் மக்களின் பிரச்சினைகளை பேச இருக்கும் நாடாளுமன்றத்தை கைவிட்டு விடுமுறை எடுக்க தயாரில்லை.
பொறுப்பற்ற அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது, பொருளாதாரத்தை அழித்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
