புடினுடன் நேரடியாக பேசினால் எரிபொருள் கிடைக்கும்! விமல் வீரவங்ச உறுதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஜனாதிபதி கோட்டாபய நேரடியாக உரையாடினால் அங்கிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்று விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி உடன் விமல் வீரவங்க தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் 11 கட்சிகளின் கூட்டமைப்பு இன்று சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் நேரடியாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டும்.
புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பலம் வாய்ந்த குழுவொன்றை புடினுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.
ஏரோப்ளொட் விமான சம்பவம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ள போதும், புடினுடன் நேரடித் தொலைபேசி உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் விமல் வீரவங்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan