இந்தியா செல்லும் ரணில் : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 20 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்ல உள்ளதாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இன்று(18.07.2023) உறுதி செய்துள்ளன.
அதன்படி தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முதல் விஜயம்
2022ல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி விக்ரமசிங்க பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா செல்கிறார்.
இரு நாடுகளும் இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |